பிக் பாஸில் அடுத்த வார கேப்டன் இவர்தான்! மாயா கேங் ஆடிய ஆட்டம்..
பிக் பாஸ் 7ம், சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிரது. அதில் மாயா மற்றும் பூர்ணிமா ஆகியோர் கேங் உருவாக்கி மற்ற போட்டியாளர்களை டார்கெட் செய்து வருவதை அர்ச்சனா விமர்சித்து வருகிறார். அதனால் அர்ச்சனாவுக்கு அதிகம் ஆதரவு ரசிகர்களிடம் இருந்து கிடைத்து வருகிறது.
சனிக்கிழமை எபிசோடில் அர்ச்சனா எழுந்து பேசும்போது மட்டும் ரசிகர்கள் ஆரவாரம் பெரிய அளவில் இருந்தது. அதை கேட்டு அர்ச்சனாவே ஆச்சர்யம் அடைந்தார்.
அடுத்த வார கேப்டன்
இந்நிலையில் சனிக்கிழமை எபிசோடு இறுதியில் கேப்டன் தேர்வு செய்ய டாஸ்க் நடந்தது. அதில் கூல் சுரேஷ், அர்ச்சனா மற்றும் விஷ்ணு போட்டியிட்டனர்.
அந்த டாஸ்கில் விஷ்ணு ஜெயித்து அடுத்த வார கேப்டன் பதவியை பிடித்தார். அதை பார்த்து மாயா - பூர்ணிமா கேங் டான்ஸ் ஆடி ஆட்டம் போட்டு கொண்டாடினார்கள்.
அதனால் விஷ்ணு - பூர்ணிமா கேங் வரும் வாரத்தில் அர்ச்சனாவை டார்கெட் செய்யும் என எதிர்பார்க்கலாம்.