இந்த வாரம் yellow கார்டு இவருக்கு தான்.. பிக் பாஸ் ரசிகர்கள் மோசமாக விமர்சிக்கும் போட்டியாளர்
பிக் பாஸ் 7ல் கடந்த வாரம் கேப்டனாக இருந்த விஜய்க்கு கமல் yellow கார்டு காட்டி அவருக்கு strike கொடுத்தார். இது போல மூன்று strike வாங்கினால் வெளியில் அனுப்பப்படுவீர்கள் என்றும் கமல் எச்சரித்து இருந்தார்.
பிரதீப் வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தை பற்றி இரண்டு பெண் போட்டியாளர்களிடம் பேசி நக்கல் செய்து சிரித்ததற்காக தான் இந்த் வார்னிங் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அடுத்த வாரமும் ஒரு போட்டியாளர் yellow கார்டு அல்லது ரெட் கார்டு வாங்க வாய்ப்பிருக்கிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
விஷ்ணு
பிரதீப் பற்றி மிகவும் மோசமாக பேசி வரும் விஷ்ணு மற்றும் மாயா ஆகியோர் தான் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.
பிரதீப்பை பைத்தியம் என்றும் அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நான் தூங்கும் போது அவன் எதாவது செய்துவிடுவான் என பயமாக இருக்கிறது என மாயா பிக் பாஸ் கன்பெக்ஷன் ரூமில் செய்து புகார் செய்ததும் குறிப்பிடத்தக்கது.