இந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறியது இவரா?- யாருமே எதிர்ப்பார்க்கவில்லையே?
பிக்பாஸ் 7
அக்டோபர் 1ம் தேதி படு மாஸாக தொடங்கப்பட்டது பிக்பாஸ் 7. நிகழ்சசி தொடங்கி 75 நாட்களை எட்டிய நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களை கொஞ்சம் கொண்டாடவும் வைத்தார்.
பின் பிக்பாஸ் அதிரடியாக Mid Week எவிக்ஷன் என்ற ஒரு குண்டை போட்டு அனன்யாவை வெளியேற்றினார்.
இப்படி அடுத்தடுத்து பிக்பாஸ் அதிரடிகள் கொடுக்க போட்டியாளர்களும் கொஞ்சம் திணறி போய் உள்ளனர். அதைவிட மக்கள் என்ன பிக்பாஸ் இந்த சீசனில் அதிகம் அதிரடி காட்டுகிறார் என கமெண்ட் செய்து வந்தார்கள்.
எலிமினேஷன்
Mid Week எவிக்ஷன் முடிந்து இப்போது வார இறுதி எவிக்ஷன் குறித்து தான் மக்களிடம் பேசப்படுகிறது. இந்த வார எவிக்ஷனுக்கு நிக்சன், அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், கூல் சுரேஷ், அனன்யா என 6 பேர் நாமினேட் ஆனார்கள்.
அனன்யா ஏற்கெனவே எலிமினேட் ஆன நிலையில் இந்த வாரம் சனிக்கிழமை நிகழ்ச்சியில் இருந்து வீட்டைவிட்டு வெளியேறியது கூல் சுரேஷ் தானாம்.
அவர் இறுதி வரை வருவார் என எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு இது கடும் அதிர்ச்சியாக உள்ளது.