மண்டையில் அடி.. இந்த வாரம் பிக் பாஸில் ரெட் கார்டு உறுதி! அதிர்ச்சி வீடியோ
பிக் பாஸ் 7ம் சீசனில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் சண்டை, சச்சரவு, பிரச்சனைகள் எல்லாம் எல்லைமீறி சென்றுகொண்டிருக்கிறது.
போட்டியாளர்களுக்கு இன்று வழங்கப்பட்ட டாஸ்க் பெரிய அடிதடி சண்டையில் முடிந்து இருக்கிறது. இரண்டு வீட்டுக்கும் நடுவில் நடந்த இந்த போட்டியில் யாரிடம் அதிக சிலிண்டர்கள் இருக்கிறதோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். அதனால் இரண்டு வீட்டினரும் தள்ளுமுள்ளு சண்டை போட்டனர். அதில் கண்ணாடி கதவுகளும் உடைக்கப்பட்டு இருக்கிறது.
ரெட் கார்டு ?
அப்படி எல்லா போட்டியாளர்களும் மல்லுக்கட்டி கொண்டிருக்க விஜய் வர்மா மற்றொரு போட்டியாளர் பிரதீப்பை தூக்கி கீழே போட்டிருக்கிறார்.
என்ன WWE மூவ் எல்லாம் போடுறாரு என ஷோ பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். அதனால் இந்த வாரம் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
வீடியோ இதோ..
Red card should be given. This is violent attack clearly. #pradeep locked him and was holding him not to move.
— Jones Emmanuel J (@JonesEmmanuel14) October 19, 2023