Bigg Boss Promo : பாவம்னு பார்த்து அனுப்பாதீங்க.. பெண்களுக்கு இடையே வெடித்த சண்டை..
பிக் பாஸ் 8
பிக் பாஸ் 8 இரண்டாவது நாளான இன்று பிக் பாஸ் அனைத்து போட்டியாளர்களுக்கு செக் வைக்கும்படி விஷயத்தை செய்துள்ளார்.
இந்த சீசன் முழுவதும் பெண்கள் ஒரு அணியாகவும், ஆண்கள் ஒரு அணியாகவும் தான் விளையாடப்போகிறார்கள், அதற்காக தான் வீடும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரண்டாவது நாளில் பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கு செல்ல வேண்டும் என்றும், ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணிக்கு ஒருவர் செல்லவேண்டும், அதனை அந்தந்த அணியே சேர்ந்து முடிவு எடுத்து சொல்லும்படி பிக் பாஸ் கூறிவிட்டார்.

சாச்சனாவை தொடர்ந்து பிக் பாஸ் 8ல் வெளியேறப்போவது இவர் தானா! உடல்நல குறைவால் அவதிப்படும் போட்டியாளர்..
வெடித்த சண்டை
இதனால் யாரை அனுப்புவது என்கிற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் பெண்கள் அணியில், பவித்ராவை அனுப்ப முடிவு செய்யும் பேச்சு வந்தது.

அப்போது ஜாக்லின், ’பவித்ரா அங்கு சென்றால் பாவம் பார்ப்பார்கள்’ என கூறவும், இருவருக்கும் இடையே சண்டை வெடிக்க, 'பாவம்னு பார்த்து அனுப்பாதீங்க, நான் விளையாடுவேன் என்று தோன்றினால் மட்டும் அனுப்புங்க' என கூறிவிட்டு கண்கலங்கியபடி அங்கிருந்து சென்றுவிட்டார் பவித்ரா.
இதுவே இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ ஆகும். இதோ அந்த வீடியோ..
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri