பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எலிமினேஷனா? வெளியே போவது இவர்கள் தான்
பிக் பாஸ் 8ம் சீசன் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஆண்கள் vs பெண்கள் என்ற concept உடன் ஷோ தொடங்கிய நிலையில் அதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டு இந்த வாரம் முதல் போட்டியாளர்கள் தனித்தனியாக விளையாடலாம் என விஜய் சேதுபதி அறிவித்து இருந்தார்.
அதன்படி இந்த வாரம் நடந்த பொம்மை டாஸ்கில் பல சண்டைகளும் நடந்தது.
டபுள் எலிமினேஷன்?
இந்த வாரம் 10 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர். அவர்களில் ஜாக்குலின், அன்ஷிதா ஆகியோர் வாக்கெடுப்பில் அதிகம் வாக்குகள் பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதனால் அவர்கள் எலிமினேஷன் ஆக வாய்ப்புகள் மிக குறைவு.
அதே நேரத்தில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் குறைவான வாக்குகள் பெற்று வரும் ஷிவகுமார், சாச்சனா, மஞ்சரி ஆகியோரில் இரண்டு பேர் எலிமினேட் ஆக வாய்ப்பிருக்கிறது.
பொறுத்திருந்து பார்க்கலாம்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
