பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பவித்ரா ஜனனி... இந்த தொலைக்காட்சி தொடரா?

Yathrika
in தொலைக்காட்சிReport this article
பிக்பாஸ் 8
பிக்பாஸ் 8, விஜய் தொலைக்காட்சியில் ஓடும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரம்மாண்டமான ஒன்று.
ஹிந்தியில் 18வது சீசன் அண்மையில் நடந்து முடிந்தது, தமிழில் 8வது சீசன் இந்த பொங்கல் தான் முடிவுக்கு வந்தது. 8வது சீசன் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டார், பெரிய பரிசுத் தொகையையும் வென்றார்.
பவித்ரா
இந்த பிக்பாஸ் 8வது சீசனில் நாம் அன்றாடம் பார்த்து பழகிய சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். அதில் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்ட, கொண்டாடப்பட்ட போட்டியாளராக இருந்தவர் ஜனனி.
எல்லா டாஸ்க்குகளையும் மிகவும் தெளிவாக விளையாடி கலக்கியிருந்தார்.
பிக்பாஸ் 8 முடிந்து ஜனனி தனது நண்பர்களுடன் கோலாகலமாக பிறந்தநாளையும் கொண்டாடி இருந்தார். அண்மையில் ஜனனி பிரபல சீரியல் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார்.
சன் டிவியில் புதியதாக தொடங்கப்பட்ட ரஞ்சனி தொடரின் படப்பிடிப்பு தளத்திறகு தான் பவித்ரா சென்றுள்ளார்.
காரணம் அவரது நெருங்கிய தோழியான சாமந்தா நடித்து வருகிறார். இதோ இருவரும் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட போட்டோ,