ஹோட்டல் ஆன பிக் பாஸ் வீடு.. ஆண்கள் செய்த காரியத்தால் கதறி அழுத பவித்ரா ஜனனி
பிக் பாஸ் 8வது சீசனில் கடந்த வாரம் அர்னவ் எலிமினேட் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து இந்த வார நாமினேஷனும் நேற்று நடந்து முடிந்தது.
இந்நிலையில் இந்த வாரத்திற்கான டாஸ்க்கை பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். வீடு ஹோட்டல் ஆக மாறுகிறது என்றும், ஒரு நாள் பெண்கள் ஹோட்டல் ஊழியர்களாக மாறி விருந்தினர்களாக வரும் ஆண் டீமை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அழுத பவித்ரா
இந்த டாஸ்க்கில் பெண்கள் அணி தங்களை சரியாக கவனிக்கவில்லை, அவமானப்படுத்தினார்கள் என சொல்லி ஆண்கள் அணியினர் நெகடிவ் கமெண்ட் கூறுகின்றனர்.
அதனால் மேனேஜர் ஆக இருக்கும் பவித்ரா ஜனனி மாற்றப்படுவார் என பிக் பாஸ் அறிவிக்கிறார். அதை கேட்டு பவித்ரா கதறி அழ தொடங்கிவிட்டார்.
தன்னை மாற்ற தான் இப்படி வேண்டுமென்றே நெகடிவ் ஆக சொல்கிறார்கள் என அவர் அழுது இருக்கிறார்.