பிக் பாஸ் வீட்டிற்குள் வைக்கப்பட்ட பணப்பெட்டி.. ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட்
பிக் பாஸ் 8
பிக் பாஸ் வீட்டிற்குள் கடந்த வாரமே பணப்பெட்டி வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் ஒரு ட்விஸ்ட் வைக்கப்பட்டது. வெளியேறிய எக்ஸ் போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்தது அனைவருக்கும் ஷாக் கொடுத்தது.
இறுதி கட்டத்தை எட்டிய போட்டியாளர்களின் இடத்தை பிடிக்கவும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்களில் அதை செய்யமுடியவில்லை. இந்த வாரம் பைனல் நடக்கவிருக்கும் நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
பணப்பெட்டி
ஆம், ரூ. 50,000 தொகையுடன் இந்த பணப்பெட்டி சோதனை துவங்கியுள்ளது. ஆனால், இதில் யாரும் எதிர்பார்க்காத மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றை பிக் பாஸ் வைத்துள்ளார். இதுவரை வந்த சீசங்களில் பணப்பெட்டியை எடுத்துவிட்டால், அப்படியே வெளியேறவேண்டும். அதுதான் விதிமுறை.
ஆனால், தற்போது பணப்பெட்டியை எடுத்துவிட்டு நீங்களும் போட்டியையும் தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பணப்பெட்டி வீட்டிற்கு வெளியே உள்ளது. அது இருக்கும் இடத்த்தின் தூரத்தை சரியாக கணித்து கூறி, அதை எடுத்துவிட்டு, கொடுக்கப்படும் நேரத்திற்குள் மீண்டும் வீட்டிற்குள் பணப்பெட்டியுடன் வந்தால் மட்டுமே, அந்த போட்டியாளர் போட்டியை பணப்பெட்டியுடன் தொடரமுடியும்.
அப்படி வீட்டிற்குள் வரவில்லை என்றால், அவர் வெளியேற்றப்படுவார் என அறிவித்துள்ளனர். இதுவரை எந்த பிக் பாஸ் சீசனிலும் நடக்காத ஒன்று தற்போது நடந்துள்ள நிலையில், இதன்பின் என்ன நடக்கப்போகிறது, யார் அந்த பணப்பெட்டியை எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.