பிக் பாஸில் வரப்போகும் புது விஷயம்.. யாரும் எதிர்பார்க்காததை செய்யும் விஜய் டிவி
பிக் பாஸ் 8வது சீசன் விஜய் டிவியில் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. அதற்கான பணிகளை தற்போது பிக் பாஸ் குழுவினர் தற்போது செய்து வருகின்றனர்.
மேலும் போட்டியாளர்களாக வரும் பிரபலங்களும் இறுதி செய்யப்பட்டு இருக்கின்றனர். அக்டோபர் 6ம் தேதி பிக் பாஸ் 8 பிரம்மாண்ட தொடக்க விழா உடன் ஆரம்பிக்க இருக்கிறது.
முன்னாள் போட்டியாளர்கள்
இந்நிலையில் இதற்கு முன் பிக் பாஸில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து விஜய் டிவி ஒரு புது விஷயத்தை செய்ய இருக்கிறது.
முன்னாள் போட்டியாளர்கள் ஒருபக்கம், மக்கள் இன்னொரு பக்கம் என அமரவைத்து அவர்களுக்கு நடுவில் விவாதம் ஒன்றை நடத்த இருக்கிறது. தொடக்க நிகழ்ச்சியில் அந்த பகுதியும் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் இந்த முறை இப்படிக்கு ஒரு விஷயம் வருவது குறிப்பிடத்தக்கது.