மகாலட்சுமி அப்போவே சொன்னா.. கதறி அழுத ரவீந்தர்! பெண் போட்டியாளர் பேச்சு தான் காரணம்
பிக் பாஸ் என்றால் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. தற்போது தொடங்கி இருக்கும் பிக் பாஸ் 8வது சீஸனும் விதிவிலக்கு அல்ல.
இன்றைய எபிசோடில் விஜய் சேதுபதி போட்டியாளர்கள் எல்லோருடனும் கலந்துரையாடினார். அப்போது ரவீந்தர் செய்த பிராங்க் மற்றும் அதனால் வந்த மனக்கசப்பு ஆகியவை பற்றியும் அவர் பேசினார்.
அப்போது பேசிய RJ ஆனந்தி, "ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இருவரும் சண்டை போடும்போது அது ட்ராமாவாக இருக்குமோ என ஆரம்பத்திலேயே சந்தேகம் வந்தது."
"பொதுவாக ரவீந்தர் உட்கார்ந்து இருப்பார். தண்ணி உட்பட எதுவேண்டும் என்றாலும் நாங்கள் தான் கொண்டு வந்து கொடுப்போம். அப்போது கூட எழுந்து கொள்ளாத மனுஷன் prank செய்ய எழுந்து நின்று ஒருவிஷயம் செய்தார்."
"அதை செய்ய முடியும் அவர், எங்களிடம் வேலை வாங்கும்போது எங்களை பயன்படுத்திவிட்டாரே என தான் தோன்றியது" என ஆனந்தி கூறினார்.
அழுத ரவீந்தர்
விஜய் சேதுபதி ஷோ முடித்துவிட்டு சென்றபிறகு ரவீந்தர் இது பற்றி நினைத்து கண்ணீர் விட்டார்.
நான் கால் வலிக்கிறது என்பதால் தான் கேட்டேன். நான் உட்கார்ந்து கொண்டு வேலை வாங்குகிறேன் என சொல்கிறார். அதை கேட்கும்போது எனக்கு அப்படி இருந்தது. என் மனைவி மஹாலக்ஷ்மி அப்போதே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று" என கூறி ரவீந்தர் கண்ணீர் விட்டார்.
பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியை சில வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.