பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன்.. இரண்டாவது இடத்தை பிடித்தது யார் தெரியுமா
டைட்டில் வின்னர் முத்துக்குமரன்
பிக் பாஸ் 8 முடிவுக்கு வந்துள்ள நிலையில், டைட்டில் வின்னர் முத்துக்குமரன் என தகவல் வெளிவந்துவிட்டது. 106 நாட்கள் நடைபெற்ற இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில், இறுதி கட்டத்திற்கு 5 போட்டியாளர்கள் வந்தனர்.
முத்துக்குமரன், சௌந்தர்யா, விஜே விஷால், பவித்ரா மற்றும் ரயான். இதில் முத்துக்குமரன் அல்லது சௌந்தர்யா இருவரில் ஒருவருக்கு தான் டைட்டில் கிடைக்கும் என ரசிகர்கள் கூறி வந்த நிலையில், முத்துக்குமரன் வென்றுள்ளார்.
இரண்டாவது இடம்
முதலிடத்தை முத்துக்குமரன் பிடித்துள்ள நிலையில், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளவர் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. சிலர் சௌந்தர்யா என கூறி வரும் நிலையில், இல்லை இல்லை அது விஜே விஷால் என மற்ற சிலர் கூறி வருகின்றனர்.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, விஜே விஷால் தான் பிக் பாஸ் 8ன் ரன்னர் அப் ஆகியுள்ளார் என்கின்றனர். சௌந்தர்யா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.