இந்த புகைப்படத்தில் இருக்கும் பிக் பாஸ் நட்சத்திரம் யார் தெரியுமா! ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர்
பிக் பாஸ் 8
பிக் பாஸ் 8 முடிந்தாலும், அதனுடைய தாக்கம் இன்றும் சமூக வலைத்தளத்தில் இருந்துகொண்டு இருக்கிறது. பிக் பாஸ் 8ன் கொண்டாட நிகழ்ச்சி சமீபத்தில் எடுக்கப்பட்டது. அடுத்த வார இறுதியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி முன் நின்று தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் டாப் 2-வில் முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா இருவரும் தேர்வானார்கள். இதில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற முத்துக்குமரன், பிக் பாஸ் 8ன் டைட்டில் வின்னர் ஆனார். இவருடைய வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
வைரல் புகைப்படம்
திரையுலக பிரபலங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் பிக் பாஸ் 8 மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட ஒருவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அவர் வேறு யாருமில்லை பிக் பாஸ் 8ல் டாப் 2வில் வந்த போட்டியாளர்கள் சௌந்தர்யாவின் சிறு வயது புகைப்படம் தான் இது. ஆம், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள சௌந்தர்யாவின் குழந்தை பருவ புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அட இது நம்ம சௌந்தர்யாவா இது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.