ஆட்டம் போட்ட பெண்கள் டீம்.. ஆனால் அதற்கு பின் கிடைத்த அதிர்ச்சி! பிக் பாஸில் இன்று
பிக் பாஸ் 8ல் தற்போது இரண்டாவது வாரம் தொடங்கி இருக்கிறது. நேற்று போட்டியாளர்கள் ஷாப்பிங் செய்ய டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இருக்கும் தொகையை விட ஆண்கள் டீம் பல ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக ஷாப்பிங் செய்ததால் பிக் பாஸ் அவர்களின் பொருட்களில் இருந்து தனக்கு தோன்றியதை மட்டுமே அனுப்புவேன், அதை வைத்து சமைத்துக்கொள்ளுங்கள் என கூறிவிடுகிறார்.
இதை கேட்டு ஆண்கள் டீமுக்கு புதிதாக வந்திருக்கும் தர்ஷா குப்தா ஷாக் ஆகி ஆண்களிடம் சண்டை போட்டார். ஆனால் அவர் திரும்பி சிரித்ததை ஜெப்ரி, விஷால் உள்ளிட்டோர் பார்த்துவிடுகின்றனர். அதனால் அவர் சண்டை போடுவது போல நாடகம் ஆடுகிறார் என மற்றவர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.
தர்ஷா இப்படி ஆண்களை அசிங்கப்படுத்துவதை பெண்கள் டீமில் கொண்டாடினார்கள்.
பெண்கள் டீம் ஷாக்
ஆனால் அதற்கு பிறகு பிக் பாஸ் பொருட்களை அனுப்பி வைத்த பிறகு தான் பெண்கள் டீமுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம் பெண்கள் வாங்கியதை விட மிக அதிகமாகி தான் ஆண்கள் டீமுக்கு பொருட்கள் வந்திருக்கிறது. அதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி ஆகி விட்டனர்.