டபுள் எலிமினேஷன் இல்லை.. இந்த வாரம் வெளியே போவது இவர்தான்
பிக் பாஸ் 8ம் சீசன் தற்போது 75 நாட்களை கடந்துவிட்டது. இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையிலும் போட்டியாளர்கள் சீரியஸாக விளையாடாமல் இருந்து வருவது பிக் பாஸ் டீமுக்கே கோபத்தை ஏற்படுத்து வருகிறது.
அதனால் பிக் பாஸ் தொடர்ந்து போட்டியாளர்களை எச்சரித்து வருகிறார். அதையும் போட்டியாளர்கள் மதிப்பதாக இல்லை, விட்டுக்கொடுத்து டாஸ்குகளில் விளையாடி கொண்டிருக்கின்றனர்.
இன்று நடந்த கேப்டன்சி டாஸ்கில் முத்து விட்டுக்கொடுத்து விளையாடியதால் பிக் பாஸ் டென்ஷன் ஆகி போட்டியாளர்களை கடுமையாக திட்ட தொடங்கிவிட்டார். கேப்டன்சி டாஸ்க் ரத்து செய்யப்பட்டது மட்டுமின்றி, நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கூட ரத்து செய்யப்பட்டுவிட்டது.
எலிமினேஷன் யார்
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களை போல இந்த வாரமும் டபுள் எலிமினேஷன் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
ஆனால் இந்த வாரம் சிங்கிள் எலிமினேஷன் தான் என்கிற தகவல் வந்திருக்கிறது. வெளியே போகப்போவது ராயன் அல்லது ரஞ்சித் ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.