பிக் பாஸ் 8ல் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. யார் தெரியுமா
பிக் பாஸ்
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 8 தற்போது 75 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாகவே டபுள் எலிமினேஷன் நடந்து வருகிறது.
ஆர்.ஜே. ஆனந்தி மற்றும் சாச்சனா முதலில் டபுள் எலிமினேஷன் செய்யப்பட்டனர். பின் அடுத்த வாரத்தில் சத்யா மற்றும் தர்ஷிகா இருவரும் வெளியேறினார்கள்.
டபுள் எலிமினேஷன்
இந்த நிலையில், இந்த வாரமும் டபுள் எலிமினேஷன் என தகவல் வெளிவந்துள்ளது. இதில் முதல் எலிமினேஷனாக ரஞ்சித் வெளியேறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டிற்குள் 75 நாட்களை கடந்து போட்டியிட்டு வந்தவர் நடிகரும், இயக்குனருமான ரஞ்சித். இவர் ஏன் இவ்வளவு நாட்கள் வீட்டிற்குள் இருந்தார் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ரஞ்சித் எலிமினேட் ஆகியுள்ளார் என தகவல் வெளிவந்துள்ள நிலையில், அடுத்த வெளியேறப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
You May Like This Video

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
