பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் இவர் தானா! ரூ. 50 லட்சம் இவருக்கு தான் சொந்தமா
பிக் பாஸ் 8
பிக் பாஸ் 8 விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. 85 நாட்களை கடந்துள்ள நிலையில் 23 போட்டியாளர்களில் இருந்து 10 பேர் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கிற்கு வந்துள்ளனர்.
ஆம், இந்த வாரம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த டிக்கெட் டு பினாலே போட்டி நடக்கவுள்ளது. இதில் வெற்றிபெறும் அந்த ஒரு போட்டியாளர் நேரடியாக பைனலுக்கு தேர்வாகவுள்ளார். அது யாராக இருக்கும் என்பதை பார்க்க அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
டிக்கெட் டு பினாலே பற்றிய பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும், பிக் பாஸ் 8ன் டைட்டில் வின்னர் இவர் தான் என கூறி, ரசிகர்கள் சிலர் பேசி வருகிறார்கள்.
டைட்டில் வின்னர்
அதன்படி, சௌந்தர்யா தான் பிக் பாஸ் சீசன் 8ன் டைட்டில் வின்னர் என கூறுகின்றனர். அதே போல் மறுபுறம் முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் என சிலர் கூறி வருகிறார்கள்.
தற்போது வீட்டிற்குள் இருக்கும் 10 போட்டியாளர்களின் இவர்கள் இருவருக்கு இடையே தான் கடும் போட்டி என்றும், இவர்கள் இருவரில் ஒருவர் தான் டைட்டில் வெல்லப்போகிறார்கள் என்றும் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.
ஆனால், இறுதியில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. கமல் ஹாசன் அவர்கள் கூறுவது போல், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதே பிக் பாஸ் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.