பிக்பாஸ் 9 நிகழ்ச்சி முடிந்த கையோடு போட்டியாளர்கள் எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க... போட்டோ இதோ
பிக்பாஸ் 9
ரசிகர்கள் கொண்டாடும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.
105 நாட்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த திவ்யா கணேஷ் ஜெயித்தார்.

இந்த சீசனில் நடந்த ஒரு விஷயத்தில் ரசிகர்களால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் என்றால் அது கார் டாஸ்க்கில் நடந்த ஒரு விஷயம் பற்றி தான். அதாவது கார் டாஸ்கின் போது சாண்ட்ராவை கீழே தள்ளிவிட அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
கம்ருதீன-பார்வதி செய்த இந்த மோசமான செயலால் ரசிகர்கள் மிகவும் கோபப்பட அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார்கள். எப்படியோ எல்லா பிரச்சனையும் முடிந்து பிக்பாஸும் முடிவுக்கு வந்தது.

போட்டியாளர்கள்
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி முடிந்த கையோடு அவரவர் தனியாக பேட்டிகள் கொடுப்பது, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என பிஸியாக இருந்தனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் 9 போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan