எலிமினேஷனுக்கு பிறகு அழுத முகத்துடன் வீட்டிற்கு வந்த பிக்பாஸ் 9 பிரவீன்... அடுத்து நடந்த விஷயம், வீடியோ, இதோ
பிக்பாஸ் 9
பிக்பாஸ் 9, ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக பெரிய பட்ஜெட்டில் ஒளிபரப்பாகும் ஒரு ஷோ.
கடந்த அக்டோபர் 5ம் தேதி பிரம்மாண்டத்தின் உச்சமாக பிக்பாஸ் ஒளிபரப்பாக தொடங்க ஆரம்பத்தில் இருந்தே வீட்டில் சண்டை, சர்ச்சை, Red Card கொடுக்கும் அளவிற்கு சில விஷயங்கள் என நடந்து வருகிறது.
வார இறுதியில் விஜய் சேதுபதி வரும் எபிசோடுகளில் போட்டியாளர்களை தாக்கும் எபிசோடாகவே இருக்கும்.

எலிமினேஷன்
தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேறிக் கொண்டே இருக்க திடீரென வைல்ட் கார்ட்டு என்டரியும் உள்ளே வந்தார்கள்.
அவர்கள் என்ட்ரி கொடுத்ததும் நிகழ்ச்சி அப்படியே மாறி அட்டகாசமாக இருந்தது. ஆனால் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத வண்ணம் கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து பிரவீன் வெளியேறினார்.

இதுவரை நடந்த எலிமினேஷன்களில் பிரவீன் வெளியேறியது ரசிகர்களுக்குமே வருத்தமாக இருந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் 9வது சீசன் வீட்டில் இருந்து வெளியேறிய பிரவீன் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அவர் அழுத முகத்துடன் மிகவும் சோகமாக கண்ணீருடன் வீட்டிற்கு வந்துள்ளார். மிகவும் கஷ்டத்துடன் வீட்டிற்கு வந்தவரை அவரது மனைவி ஆர்த்தி எடுத்து மாலை போட்டு வரவேற்றுள்ளார். இதோ வீடியோ,