நான் பிக்பாஸ் 9ல் இருந்து வெளியேறிய காரணமே அதுதான்... ஓபனாக கூறிய பிரவீன் ராஜ்
பிக்பாஸ் 9
பிக்பாஸ் 9, விஜய் டிவியில் அதிக பட்ஜெட்டில் ஒளிபரப்பாகும் ஒரு ஷோ.
கடந்த அக்டோபர் 5ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய இந்த ஷோ 40 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

யூடியூபர் விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருதீன், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ், எப்ஜே, சபரி நந்தன், வியானா, பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்களடன் தொடங்கப்பட்டது.
இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் ஆகியோர் இதுவரை வெளியேறியுள்ளனர். வைல்ட் கார்டு என்ட்ரியாக திவ்யா கணேஷ், பிரஜன், சான்ட்ரா மற்றும் அமிர் உள்ளே வந்துள்ளனர்.

பிரவீன் பேட்டி
கடைசியாக எலிமினேட் ஆன பிரவீன் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் என்ன செய்தால் சர்வே பண்ண முடியும் என்று எனக்கு ஒன்னும் புரியவில்லை.

என்ன செய்தால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியும் என்பது தெரியவில்லை. நான் வெளியேறியதற்கு காரணம் யாருமே கிடையாது, என்னுடைய தன்னம்பிக்கை குறைவாக இருந்தது தான் காரணம்.
மேலும் நிகழ்ச்சியில் அடல்ட் டாபிக் பற்றி எங்க முன்னாடியே நடந்திருக்கிறது. அதெல்லாம் நேரில் பார்க்கும் போது தான் குமட்டிட்டு வரும், நாங்களே கூப்பிட்டு இதெல்லாம் பண்ணாதீங்கன்னு சொல்லி இருக்கோம் என தெரிவித்துள்ளார்.
