பிக்பாஸ் 9 நிகழ்ச்சியை முடித்த கையோடு சபரி எங்கே சென்றுள்ளார் பாருங்க... ஸ்பெஷல் இடம்
பிக்பாஸ் 9
கடந்த வருடம் அக்டோபர் மாதம் விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 9. பல தெரிந்த முகங்கள் கொண்ட இந்த சீசன் சூப்பராக இருக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் ஒரே சண்டை தான், ஸ்பெஷல் மூமெண்ட் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் தான் இருந்தது. ஆனால் எப்படியோ பிக்பாஸ் 9, 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக முடிந்துவிட்டது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த சீசனில் கம்ருதீன் மற்றும் பார்வதி ரெட் கார்டு வாங்கி வெளியேறிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது இந்த சீசன் வெற்றியாளராக வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த திவ்யா தேர்வாகி டைட்டிலையும் வென்றுவிட்டார்.
ரூ. 50 லட்சம் பணத்துடன் நிறைய பரிசுகளும் அவருக்கு கிடைத்துள்ளது.
சபரி
இந்த சீசனில் மக்கள் மனதை வென்ற போட்டியாளர்களில் மற்றொருவர் தான் சபரி. பிக்பாஸ் முன் சீரியல் நடிகராக மக்களுக்கு அறிமுகமாகி இருந்து வந்தவர் இப்போது பிக்பாஸ் பிரபலமாக மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர் பிக்பாஸ் 9 நிகழ்ச்சியை முடித்த கையோடு வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.
