பிக் பாஸ் 9 பைனலுக்கு கிடைத்த TRP.. பிபி வரலாற்றில் இதுதான் அதிகமா?
பிக் பாஸ் 9
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று, ஜனவரி 18ஆம் தேதி நிறைவுபெற்றது. இந்த சீசனில் கானா வினோத், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், அமித், திவ்யா கணேஷ், கம்ருதீன், பார்வதி, சாண்ட்ரா, பிரஜன் உள்ளிட்ட 24 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற திவ்யா கணேஷ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை தொடர்ந்து சபரி, விக்ரம் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். திவ்யா கணேஷ் வெற்றியை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினார்கள்.
பைனல் TRP ரேட்டிங்
பிக் பாஸ் பைனல் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில், தற்போது அதனுடைய TRP ரேட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக் பாஸ் பைனல் போட்டி 6.10 TRP ரேட்டிங் பெற்றுள்ளது.

பிக் பாஸ் வரலாற்றிலேயே இதுதான் அதிகமா என்றால்? அதுதான் இல்லை. பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் சீசன் 4-ன் பைனல் தான் அதிக TRP ரேட்டிங் பெற்றுள்ளது. அதனுடைய TRP ரேட்டிங் 16.06 என்பது குறிப்பிடத்தக்கது.