நான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் அப்படிதான்... ஓபனாக பேசிய பிக்பாஸ் 9 கம்ருதீன்
பிக்பாஸ் 9
விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 9.
நிகழ்ச்சியில் பல சின்னத்திரை பிரபலங்கள் போட்டி போட்டாலும் ஆரம்பத்தில் விறுவிறுப்பாகவே இல்லை. இப்படியே நிகழ்ச்சி போனால் டல் அடிக்கும் என பிளானை மாற்றிய பிக்பாஸ் அதிரடியாக ஒரே நேரத்தில் 4 வைல்ட் கார்ட்டு என்ட்ரியை இறக்கினார்கள்.

அவர்கள் வந்ததும் பிக்பாஸ் 9 சூடு பிடிக்க தான் ஓடிக் கொண்டிருந்தது, அதிலும் நிகழ்ச்சியின் இறுதியில் பார்வதி-கம்ருதீன் ரெட் கார்டு வாங்கி வெளியேறியது எல்லாம் பரபரப்பின் உச்சமாக சென்றது.
எப்படியோ ஒரு வழியாக திவ்யா வெற்றியாளராக அறிவிக்கப்பட நிகழ்ச்சியும் முடிவுக்கு வந்தது.
கம்ருதீன்
மகாநதி சீரியல் மூலம் தனி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியவர் பிக்பாஸ் 9 மூலம் ரசிகர்களுக்கு தன் மீது இருந்த எண்ணத்தை மாற்றிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

அவர் ரெட் கார்டு வாங்கிய போது நிறைய மோசமான விமர்சனங்கள் எல்லாம் வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கம்ருதீனிடம் அவரது திருமணம் குறித்தும், எப்படிபட்ட பெண் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கம்ருதீன் கூறியதாவது, நான் ஜாலியான நபர், எனக்கு எப்போதும் அன்பைப் பொழியும், எதற்கு எடுத்தாலும் என்னங்க, மாமா என அழைக்கும் அமைதியான மனைவி அமைய வேண்டும் என எதிர்ப்பார்த்தேன்.
ஆனால் தைரியமான சிங்கம் போன்ற பெண் மனைவியாக கிடைக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.