சூடுபிடித்த பிக் பாஸ் 9.. வைல்டு கார்டு நுழைந்ததும் இப்படி மாறிடுச்சே
பிக் பாஸ் 9ம் சீசனில் நேற்று விஜய் சேதுபதி எல்லா போட்டியாளர்களையும் கடும் கோபத்தில் திட்டி தீர்த்துவிட்டார். போட்டியாளர்கள் கத்தி கொண்டே இருப்பதால் யாரையும் ஷோ பார்க்க முடியவில்லை என்பதை தெரிவித்த அவர், சிலர் கெட்ட வார்த்தை பேசுவது, மற்றவர்களை மிரட்டுவது போன்ற செயல்கள் செய்பவர்களையும் எச்சரித்தார்.
இந்நிலையில் முன்பு அறிவிக்கப்பட்டது போலவே இன்று நான்கு புது வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் வீட்டில் நுழைந்து இருக்கின்றனர்.

கிழி.. கிழி..
சாண்ட்ரா ப்ரஜின் ஆகியோர் வீட்டுக்குள் போனதும் கிழி கிழி என கிழிக்கப்போவதாக கூறினார்கள். அதே போல வீட்டில் எல்லா போட்டியாளர்கள் கையிலும் பேப்பர் கொடுத்து, எதற்காக பிக் பாஸ் வந்தீர்கள் என எழுத சொல்கிறார்.
அவர்கள் எழுதியதும், அதை படித்து பார்த்து, பார்வதி உள்ளிட்ட போட்டியாளர்களின் பேப்பரை கிழித்து வீசுகிறார்.
மேலும் அமித் பார்கவ்வும் அதிரடியாக பேசி இருக்கிறார். ப்ரோமோவில் நீங்களே பாருங்க.