பிக்பாஸில் இருந்து கடைசியாக வெளியேறிய சாண்ட்ரா வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா?
பிக்பாஸ் 9
விஜய் டிவியின் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக உள்ளது பிக்பாஸ் 9.
கடந்த வருடம் அக்டோபர் 5ம் தேதி பிரம்மாண்டத்தின் உச்சமாக தொடங்கப்பட்ட இந்த ஷோ இப்போது முடிவை எட்டிவிட்டது. விஜய் சேதுபதி 2வது முறையாக தொகுத்து வழங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் நிறைய அதிரடி விஷயங்கள் நடந்துவிட்டது.

ஆரம்பத்தில் இருந்தே இந்த சீசனிற்கு மக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருந்தது. அதற்கு ஏற்றார் போல் அசிங்கமாக பேசுவது, Body Shaming போன்று போட்டியாளர்கள் ரசிகர்கள் வெறுக்கும் அளவிற்கு நிறைய செய்துவிட்டனர்.
அந்த கோபம் அதிகமாகி கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் Red Card வாங்கும் அளவிற்கு ஆகிவிட்டது.

சம்பளம்
20 போட்டியாளர்களுடன் ஆரம்பத்தில் தொடங்கி பின் 4 லைல்ட் கார்ட்டு என்ட்ரியோடு ஒளிபரப்பாகி வந்த இந்த பிக்பாஸில் இருந்து கடைசியாக வெளியேறியவர் தான் சாண்ட்ரா. வீட்டிற்கு வந்த சாண்ட்ராவிற்கு அவரது குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

பிக்பாஸ் 9 வீட்டில் நன்றாக விளையாடிய சாண்ட்ரா ரூ. 1 முதல் ரூ. 2 லட்சம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே வந்ததாக கூறப்படுகிறது.