முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ
பிக்பாஸ் 9
விஜய் டிவியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக பெரிய பட்ஜெட்டில் ஒளிபரப்பாகி வரும் ஷோ பிக்பாஸ்.
9வது சீசன் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்க ஒரே சண்டையாக செல்கிறது.
எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு எப்போது பாரு சண்டை, பிக்பாஸ் கண்டிஷன்களை மதிக்காமல் இருப்பது, வீட்டின் தலைவராக நியமிக்கப்பட்டவரை மதிக்காமல் தங்களுக்கு தோன்றிய விஷயங்களை செய்வது என ஒழுக்கமே இல்லாத வீடாக உள்ளது.
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு
ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் 9 வீட்டின் வார எபிசோடுக்கு வரும் விஜய் சேதுபதி போட்டியாளர்களை கண்டித்துக்கொண்டு தான் இருக்கிறார், ஆனால் யாருமே சொல்வதை கேட்பது இல்லை.

புரொமோ
தற்போது இன்றைய எபிசோடின் புரொமோவில் விஜய் சேதுபதி, பிரஜனை கடுமையாக கண்டிக்கிறார். அவர் கொஞ்சம் அதிகம் வார்த்தைகள் பேச அதையெல்லாம் கூறி என்ன இது என விஜய் சேதுபதி கண்டிக்க அவரை முறைத்தபடி நிற்கிறார்.
விஜய் சேதுபதி அவருக்கு தக்க பதிலடி கொடுத்து மாஸ் காட்டுகிறார்.