ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி
பிக் பாஸ் 9ம் சீசனில் இருந்து இன்று ஆதிரை எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்.
முதல் வாரத்தில் இருந்தே முக்கிய போட்டியாளராக இருந்து வந்த அவர் திடீரென எலிமினேட் ஆனது அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
கம்ருதீன் மற்றும் ஆதிரை இருவரும் அவர்களுக்கு நடுவில் வெளியில் இருக்கும் பிரச்னையை வைத்து பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டது, இந்த வாரம் வினோத் மீது கால் வைத்தது என சில சர்ச்சைகள் சந்தித்த ஆதிரைக்கு இந்த வாரம் மக்கள் வாக்குகள் குறைந்ததால் எலிமினேட் ஆகி இருக்கிறார்.

பிக் பாஸ் செய்த விஷயம்
வழக்கமாக எலிமினேஷன் அறிவிக்கப்பட்ட பிறகு எல்லா போட்டியாளர்களிடமும் விடைபெற்று கொண்டு அந்த நபர் வெளியில் வருவார். ஆனால் ஆதிரைக்கு மட்டும் பிக் பாஸ் ஸ்பெஷலாக ஒரு விஷயம் செய்தார்.
"நீங்கள் இவ்வளவு சீக்கிரம் வெளியில் போக வேண்டிய போட்டியாளர் அல்ல. தலைநிமிர்ந்து வெளியில் செல்லுங்கள்" என பிக் பாஸ் கூறி வழியனுப்பி வைத்து இருக்கிறார்.
வெளியில் வந்த பின் விஜய் சேதுபதியிடம் ஆதிரை பேசும்போது "தகுதியில்லாத பலர் வீட்டில் இருக்கும்போது என்னை எலிமினேட் செய்ததால், இவர்களுக்கு (மக்களுக்கு) கேம் புரியவில்லை" என ஆதிரை சொல்ல, விஜய் சேதுபதி எந்த பதிலும் சொல்லாமல் வெளியில் செல்லும் வழியை காட்டி கிளம்ப சொல்லிவிட்டார்.

இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri