தர்பூசணி ஸ்டாரை எட்டி உதைத்த பார்வதி.. பிக் பாஸ் 9ல் இன்று
விஜய் டிவியின் பிக் பாஸ் 9ம் சீசன் தொடங்கி நான்கு நாட்கள் மட்டுமே ஆகிறது. முதல் நாளில் இருந்தே தண்ணீர் பிடிக்கும் டாஸ்க் கொடுத்திருக்கிறார் பிக் பாஸ்.
ஆனால் தண்ணீர் பிடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சபரிநாதன், கம்ருதீன் ஆகியோர் அதை சரியாக செய்யாமல் தூங்கிவிட்டதாக பிக் பாஸ் வீடியோ போட்டு காட்ட, அவர்கள் இருவரையும் மற்ற போட்டியாளர்கள் தாக்கி பேசினார்கள்.
தர்பூசணியை எட்டி உதைத்த பார்வதி
மேலும் காலையிலே பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்தார். தர்பூசணி திவாகர் எல்லோருக்கும் நடிப்பு சொல்லி கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது.
அப்போது அவர் மற்ற போட்டியாளர்களுக்கு சீன் சொல்லி நடிக்க சொல்ல, அப்போது பார்வதியும் ஒரு காட்சியில் நடித்தார்.
அப்போது பார்வதி தர்பூசணி திவாகரை எட்டி உதைக்க எல்லோரும் ஷாக் ஆகிவிட்டனர். அதுவும் நடிப்பு தான் என அதன் பின் இருவரும் கூறி சமாளித்தார்கள்.
துவைக்கும் டாஸ்க்
அதன் பின் வீட்டின் தல தேர்வும் செய்யும் டாஸ்க் இரண்டாம் சுற்று நடந்தது. அதில் அழுக்கு ஜீன்ஸ் துவக்க வேண்டும், அதில் மூன்று பேர் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்வார்களா என சொல்லப்பட்டது.
அந்த டாஸ்கில் கெமி மற்றும் பார்வதி இருவரும் மோதிக்கொண்டனர். டாஸ்க்கில் தோற்றத்தால் தனியாக சென்று கண்ணீர் விட்டார் பார்வதி.