பிக் பாஸ் 9 முதல் எலிமினேஷன் இவர்தானா.. Voting-ல் அதிகம் வாக்குகள் பெறுவது யார் தெரியுமா?
விஜய் டிவியின் பிக் பாஸ் 9ம் சீசன் கடந்த ஞாயிறு அன்று தொடங்கியது. மொத்தம் 20 போட்டியாளர்கள் உடன் தொடங்கி இருக்கும் இந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்தே வீட்டில் சண்டை மற்றும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.
அதனால் ஷோவில் பங்கேற்று இருக்கும் பிரபலங்கள் மீது அதிகம் விமர்சனங்களும் இணையத்தில் வந்துகொண்டிருக்கிறது. மேலும் போட்டியாளர்களை தேர்வு செய்த விதமும் விமர்சனத்துற்கு உள்ளாகி இருக்கிறது.
முதல் எலிமினேஷன்
முதல் வார நாமினேஷனில் தற்போது 7 பேர் இருக்கின்றனர். அதில் தர்பூசணி திவாகர் மற்றும் அகோரி கலையரசன் ஆகிய இருவரை தான் அதிகம் பேர் நாமினேட் செய்தனர்.
தற்போது நடந்து வரும் Voting-ல் பிரவீன் காந்தி தான் மிக குறைவான வாக்குகள் பெற்று வருகிறாராம். அதனால் அவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்புகள் இருக்கிறது.
மேலும் ஆதிரை, தர்பூசணி திவாகர், வியானா ஆகியோர் தான் அதிக வாக்குகள் பெற்று டாப்பில் இருப்பதாக தெரிகிறது.
எலிமினேட் ஆகப்போவது யார் என்பதை ஞாயிற்றுக்கிழமை வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.