Bigg boss 9 elimination: முதல் வாரமே வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக் பாஸ்
பிக் பாஸ் 9 கடந்த வாரம் பிரம்மாண்டமாக துவங்கியது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தனர்.
முதல் நாளில் இருந்தே ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு இடையே உரசல் ஏற்பட்டது. கடுமையான வாக்குவதாலும் வந்தது. இதில், மனதளவில் தன்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று முடிவு செய்த போட்டியாளர் நந்தினி, நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து தானாகவே வெளியேறினார்.
எலிமினேட் ஆன போட்டியாளர்
இவருடைய வெளியேற்றம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. சரி, இந்த வாரம் ஒரு போட்டியாளர் தானாகவே வெளியேறிவிட்டார், அதனால் எலிமினேஷன் இருக்காது என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில், முதல் எலிமினேஷ் நடைபெற்றுள்ளது.
பிக் பாஸ் சீசன் 9ல் முதல் வாரத்தில் நடைப்பெற்ற வோட்டிங்கில் குறைவான வாக்குகளை பெற்று, வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார் பிரவீன் காந்தி. இதன்மூலம் முதல் வாரமே இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இனி வரும் நாட்களில் பிக் பாஸ் 9ல் என்னென்ன ட்விஸ்ட் இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.