டபுள் எலிமினேஷனா.. அதிரடியாக அறிவித்த விஜய் சேதுபதி! பிக் பாஸில் எல்லோரும் ஷாக்
பிக் பாஸ் 9ல் இந்த வாரம் பல ட்விஸ்டுகள் வந்திருக்கிறது. இத்தனை வாரங்கள் போட்டியாளர்களை கண்டுகொள்ளாமல் இருந்த விஜய் சேதுபதி இந்த வாரம் திடீரென பொங்கி எழுந்து மொத்த பேரையும் வறுத்தெடுத்துவிட்டார்.
மேலும் எலிமினேஷனையும் சனிக்கிழமை எபிசோடிலேயே விஜய் சேதுபதி அறிவித்துவிட்டார். அதற்கு காரணம் நாளை ஞாயிற்றுக்கிழமை நான்கு புது போட்டியாளர்கள் வீட்டுக்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைய இருக்கின்றனர். அவர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதால் எலிமினேஷன் சனிக்கிழமையை அறிவிக்கப்பட்டுவிட்டது.

டபுள் எலிமினேஷனா?
எலிமினேஷனை அறிவிக்கும்போது விஜய் சேதுபதி "இரண்டு பேரை வெளியேற்ற வேண்டும்" என கூற எல்லோரும் ஷாக் ஆகிவிட்டனர்.
'ஆனால் ஒருவர் பற்றி தான் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது' என சொல்லி கலையரசன் எலிமினேட் ஆவதாக கார்டை காட்டினார் விஜய் சேதுபதி.
அதை எதிர்பார்த்தது போலவே கலையரசன் கொஞ்சமும் கவலை இல்லாமல் வீட்டில் இருந்து விடைபெற்றுக்கொண்டு கிளப்பினார்.
