பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள கனி மொத்தமாக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 9
பிக்பாஸ் 9, கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து 8 மற்றும் 9வது சீசன்களை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த 9வது சீசன் படு மோசமாக இருக்கிறது என்பது பார்வையாளர்களின் விமர்சனமாக உள்ளது. எப்போதும் சண்டை, ஒரு மரியாதை இல்லை, டபுள் மீனிங் இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

விஜய் சேதுபதி ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சிக்குள் வந்து போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகள் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார், ஆனால் யாரும் கேட்டது போல் தெரியவில்லை.

சம்பளம்
பிக்பாஸ் 9வது தொடங்கப்பட்டு 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் தொடங்கிய 5 நாட்களில் உடல்நிலை சரியில்லாததால் நந்தினி வீட்டைவிட்டு வெளியேறினார். அதன்பின், பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் ஆகிய 6 போட்டியாளர்கள் அடுத்தடுத்த வாரங்களில் எலிமினேட் ஆனார்கள்.

இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று கனி வெளியேறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
கனி பிக்பாஸில் விளையாட ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் என சம்பளம் பேசப்பட்டு உள்ளே செல்ல 40 நாட்களுக்கு ரூ. 4 லட்சத்தை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.