தண்ணீர் இல்லை, பேப்பர் தான்.. முதல் நாளே பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய பிரச்சனை
பிக் பாஸ் 9ம் சீசன் இன்று தொடங்கி இருக்கிறது. இணையத்தில் பிரபலமாக இருக்கும் பல பேர் போட்டியாளர்களாக வீட்டுக்குள் அனுப்பப்பட்டு இருக்கின்றனர்.
வாட்டர் மெலன் திவாகர், கனி திரு, VJ பாரு, சீரியல் நடிகர் சபரிநாதன், இயக்குனர் பிரவீன் காந்தி உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக வந்திருக்கின்றனர்.
தண்ணீர் பிரச்சனை
போட்டியாளர்கள் உள்ளே வரும் போதே அவர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் வெளியே இருக்கும் டேங்க் அருகில் இருக்கும் டேப் திறக்க வேண்டுமா அல்லது மூடி வைக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கும்படி டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அந்த டேப் ஆப் செய்து வைத்தால் பாத்ரூமில் தண்ணீர் வராது என்கிற நிலை தான் இருந்தது. அதனால் போட்டியாளர்களா பாத்ரூம் சென்று வந்தால் தண்ணீர் இல்லாமல் பேப்பர் தான் பயன்படுத்தி இருக்கின்றனர்.
அடுத்து தண்ணீர் திறக்கும் வரை இப்படி தான் வீடு இருக்கும் என பிக் பாஸ் அறிவித்துவிட்டார். அதனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லோரும் கடும் அதிர்ச்சி ஆகிவிட்டனர்.