பிரஜினுக்கு முன் வெளியில் ஓடிய சாண்ட்ரா.. கதவு திறந்ததும் பிக் பாஸில் அதிர்ச்சி சம்பவம்
பிக் பாஸ் 9ம் சீசன் 63 நாட்கள் கடந்து இருக்கிறது. ஷோ முடிய இன்னும் சுமார் 30 நாட்கள் மட்டுமே இருக்கிறது. அதனால் இனி வரும் எலிமினேஷன் எல்லாம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் விஜய் சேதுபதி எலிமினேஷனை அறிவித்தபோது ஒரு போட்டியாளர் மட்டும் பெரிய ஷாக் ஆனார். பிரஜின் எலிமினேட் ஆன நிலையில் சான்ட்ரா கதறி கதறி அழ தொடங்கிவிட்டார்.
அவரை பிரஜின் சமாதானப்படுத்தி நீண்டநேரம் பேசிவிட்டு தான் வெளியில் செல்ல தயாரானார்.

வெளியில் ஓடிய சான்ட்ரா
கதவு திறந்தபோது பிரஜின் வெளியில் செல்லும் முன் சான்ட்ரா வெளியில் ஓடிவிட்டார். அதன் பின் பிரஜின் அவரை இழுத்து பிடித்து வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டுவிட்டு போனார்.
அவர் வெளியில் சென்றபிறகு மேடையில் விஜய்சேதுபதி உடன் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். சான்ட்ராவை சமாதானப்படுத்தும்படி நண்பர் விஜய் சேதுபதியை அவர் கேட்டு கொஞ்ச நேரம் ஜாலியாக பேசினார். இப்படியே நீண்ட நேரம் செல்ல, ஷோவை முடிக்கணும் கிளம்புங்க என சொல்லி விஜய் சேதுபதி தான் அனுப்பி வைத்தார்.
