பிக் பாஸ் சீசன் 9ல் கலந்துகொள்ளும் 10 போட்டியாளர்களின் லிஸ்ட்.. யார்யார் தெரியுமா, இதோ
பிக் பாஸ் 9
கமல் ஹாசனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. பிக் பாஸ் 8 வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில், தற்போது சீசன் 9-க்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிக் பாஸ் 9ல் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், பிக் பாஸ் 9வது சீசனில் கலந்துகொள்வதற்காக ஆடிஷன் நடைபெற்று வருகிறதாம். இதிலிருந்து 10 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் ஆடிஷன் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
இதோ அந்த லிஸ்ட்:
குக் வித் கோமாளி உமைர்
விஜே பார்வதி
சீரியல் நடிகை அக்ஷிதா அசோக்
குக் வித் கோமாளி ஷபானா
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா மேனன்
நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசன்
நடிகர் பாலசரவணன்
நடன இயக்குநர் சதீஸ் கிருஷ்ணன்
சீரியல் நடிகர் புவி அரசு
சீரியல் நடிகர் வினோத் பாபு
இவர்கள் 10 பேருக்கு பிக் பாஸ் 9ல் கலந்துகொள்வதற்காக ஆடிஷன் நடந்துள்ளதாகவும், இதில் இருந்து கூட போட்டியாளர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இவை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.