இந்த வாரம் பிக் பாஸ் 9ல் இருந்து வெளியேறிய போட்டியாளர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக் பாஸ்
கடந்த மாதம் ஆரம்பமான பிக் பாஸ் 9 தற்போது 25 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரம் முடிவதற்குள் ரம்யா வீட்டில் இருந்து தானாக முன் வந்து வெளியேறினார்.

இதை தொடர்ந்து அதே வாரம் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார். இதன்பின் அப்சரா மற்றும் ஆதிரை என இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
இந்த வாரம் வெளியேறிய நபர்
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9ல் இருந்து இந்த வாரம் வெளியேறியுள்ள போட்டியாளர் குறித்து உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் இருந்து குறைவான வாக்குகளை பெற்ற கலையரசன் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இது அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது.

மேலும் இந்த வாரம் வைல்டு கார்டு கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் நிலையில், போட்டி எப்படி மாறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.