கடந்த வாரம் வாட்டர்மெலன்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல்
பிக் பாஸ்
பிக் பாஸ் 9 தமிழ் கிட்டத்தட்ட 50 நாட்களை நெருங்கிவிட்டது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கி, பின் 4 போட்டியாளர்கள் வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்தனர். இந்த வாரம் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் மூன்று அணிகளாக பிரிந்து போட்டியிட்டனர். இதில் மாப் மாயாவீஸ் வெற்றிபெற்றனர்.

இதை தொடர்ந்து இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் இருக்கிறது என வீட்டிற்குள் வந்த கவின் கார்டு ஒன்றை கொடுத்தார். அவர் வீட்டிலிருந்து சென்றபின், அந்த கார்டை திருந்து பார்க்கும்படி கூறினார். யார் அந்த மிட் வீக் எவிக்ஷன் என பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், அது ஒரு பிராங்க் என தெரியவந்தது. இதுவரை இந்த வீட்டிலிருந்து 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

இந்த வாரம் எலிமினேஷன்
கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேறினார். இதை தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் 9ல் இருந்து எலிமினேட் ஆகியுள்ள நபர் குறித்து உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று எலிமினேட் செய்யப்பட்டுள்ளார் கெமி. பிக் பாஸ் வீட்டிற்குள் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்டு வந்த கெமி, தற்போது வெளியேறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.