Bigg Boss 9: இந்த வார எலிமினேஷன் இவர்தானா? தற்போது டாப் போட்டியாளர் யார் தெரியுமா
பிக் பாஸ் 9ம் சீசன் ஷோவிற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் சமீபத்தில் நான்கு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.
அதன் பிறகு தான் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. பழைய போட்டியாளர்கள் மற்றும் புதிதாக நுழைய போட்டியாளர்கள் இடையே வாக்குவாதமும் ஆரம்பத்தில் தீவிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எலிமினேஷன் யார்
இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மொத்தம் 10 போட்டியாளர்கள் இருக்கின்றனர். அதில் வைல்ட் கார்டு போட்டியாளர் திவ்யா கணேஷ் மற்றும் சாண்ட்ரா ஆகியோர் தான் அதிகம் வாக்குகள் பெற்று டாப்பில் இருக்கிறார்கள்.
ரம்யா மற்றும் சுபிக்ஷா ஆகியோர் தான் குறைவான வாக்குகள் பெற்று இருக்கின்றனர். அதனால் அவர்கள் இருவரில் ஒருவர் இந்த வார இறுதியில் எலிமினேட் ஆக வாய்ப்பிருக்கிறது.
