என்ன Beep-க்கு கத்துறீங்க.. எரிச்சலா இருக்கு! மொத்த போட்டியாளர்களையும் வறுத்தெடுத்த விஜய் சேதுபதி
பிக் பாஸ் 9ல் இன்று விஜய் சேதுபதி மொத்த போட்டியாளர்களையும் விளாசி வறுத்தெடுத்து இருக்கிறார். எல்லோரும் கத்தி கொண்டிருகிறார்கள் என எல்லோரும் புகார் கூறிய நிலையில் விஜய் சேதுபதி இந்த வாரம் இந்த பிரச்னையை கையில் எடுத்து இருக்கிறார்.
கையில் ஒலிபெருக்கி உடன் வந்த விஜய் சேதுபதி கத்தி கத்தி பேச வீட்டில் எல்லோரும் ஷாக் ஆனார்கள். அதன் பிறகு ஒவ்வொரு போட்டியாளர்களாக அழைத்து திட்ட ஆரம்பித்துவிட்டார்.
தகுதி, தராதரம் பற்றி பேசிய திவாகரை விஜய் சேதுபதி கடுமையாக எச்சரித்தார். நீங்க ரீல்ஸ் பண்றதுக்கு மட்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வரல என திட்டினார்.

எரிச்சலா இருக்கு
நீங்கள் கத்துவதை பார்க்க எரிச்சலா இருக்கு. கெட்ட வார்த்தையா பேசுறீங்க. எத்தனை பீப் தான் போடுவது என கலையரசனை தாக்கி பேசினார் விஜய் சேதுபதி.
"என்ன Beepக்கு பேசுறீங்க" என அவரையே நேரடியாக கேட்டுவிட்டார் விஜய் சேதுபதி.
மற்றவர்கள் யாரும் அமைதியாக இருப்பதில்லை அதனால் கத்துகிறேன் என பார்வதி கூற, நீங்க முதலில் அமைதியாக இருக்கீங்களா என கேட்டு நோஸ்கட் கொடுத்தார் விஜய் சேதுபதி.
இப்படி கத்திகொண்டே இருக்கும் நீங்கள் ஷோ பார்ப்பவர்களை துரத்திவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள் எனவும் எல்லா போட்டியாளர்களையும் எச்சரித்தார் விஜய் சேதுபதி.
