இந்த வாரம் பிக்பாஸ் 9ல் டபுள் எவிக்ஷனா?... குறைந்த வாக்குகள் பெற்றது இவர்கள்தானா?
பிக்பாஸ் 9
பிக்பாஸ் 9, ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத நிறைய விஷயங்களுடன் பரபரப்பாக நிகழ்ச்சி செல்கிறது.
60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் தொடங்கியது. 30 நாட்களில் வீட்டிற்குள் 4 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தார்கள்.
பரபரப்பாக நிகழ்ச்சி செல்ல கடந்த வாரம் ஆதிரை வீட்டுக்குள் ரீ-எண்ட்ரி கொடுத்தார். எனவே ஆட்டம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்த வாரம் கிளாசிக் சினிமா, மாடர்ன் சினிமா என 2 அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு நெக்லஸ் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை திருடு போகாமல் பாதுகாப்பது தான் டாஸ்க்.

எலிமினேஷன்
இந்த வாரம் எலிமினேஷனுக்காக 11 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். ரம்யா, அரோரா, ஆதிரை, வியானா ஆகியோர் நாமினேஷனில் இருந்து தப்பியுள்ளனர்.
மீதமுள்ள 11 பேரும் இந்த வாரம் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். இவர்களின் சுபிக்ஷா மிகவும் குறைவான வாக்குகள் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது, அவர் கண்டிப்பாக வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
அதேபோல் டபுள் எவிக்ஷனாக இருந்தால் கனி அல்லது அமித் இருவரில் ஒருவர் எலிமினேட் ஆவது உறுதி என கூறப்படுகிறது.