பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா?
பிக்பாஸ் 9
பிக்பாஸ் 9, விஜய் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர்.
இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் சர்ச்சைகளும், பிரச்சனைகளும் இருந்து வருகிறது, பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
தகுதி இல்லாத நபர்களை எடுத்துவிட்டதாகவும், விரைவில் பிக்பாஸை முடிக்க வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வாரா வாரம் விஜய் சேதுபதி வரும் எபிசோட் பரபரப்பாகவே உள்ளது, அவர் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை எடுத்துக் கூறி வருகிறார், ஆனால் யாரும் புரிந்துகொள்வது போல் தெரியவில்லை.

எலிமினேஷன்
சமீபத்தில் எலிமினேட் ஆகி சென்ற ஆதிரை மீண்டும் பிக்பாஸில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்த வார புரொமோவில் ரம்யா வேறு நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன், வீட்டிற்கு செல்கிறேன் என கூறுகிறார், கதவுகளும் திறக்கப்படுகிறது. இதற்கு இடையில் இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து பிரஜன் வெளியேறி இருப்பதாக தகவல் வந்துள்ளது.
