4 பைனலிஸ்ட் ரெடி, இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?... பிக்பாஸ் 9 அப்டேட்
பிக்பாஸ் 9
தமிழ் சின்னத்திரையில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் 9 தான்.
கடந்த வருடம் அக்டோபர் 5 ம் தேதி 20 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பைனல் மேடையில் இருவர் மட்டுமே நிற்க வைக்கப்பட்டு அதில் ஒருவர் தேர்வாவார்.

இடையில் 4 வைல்ட் கார்ட்டு என்ட்ரிகள் வேறு வந்தனர், இடையில் கம்ருதீன் மற்றும் பார்வதி ரெட் கார்டு வாங்கி வீட்டைவிட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்டனர்.
இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் 9 நிகழ்ச்சி முடிவுக்கு வரப்போகிறது, ஆனால் யார் வெற்றியாளர் என ரசிகர்களால் கணிக்க முடியவில்லை.
பைனலிஸ்ட்
பிக்பாஸ் வீட்டில் கடைசியாக கானா வினோத் ரூ. 18 லட்ச பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். ஆனால் இப்படி செய்தது பலர் பாராட்டினாலும் சிலர் டைட்டில் ஜெயிக்க வேண்டியவர் என கமெண்ட்டுகள் பதிவு செய்து வருகின்றனர்.
வீட்டில் சபரி, விக்ரம், அரோரா, திவ்யா, சாண்ட்ரா என 5 பேர் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டைவிட்டு சாண்ட்ரா எலிமினேட் செய்யப்பட்டுள்ளாராம்.
