இந்த வாரம் பிக் பாஸ் 9ல் நாமினேட் ஆகியுள்ள போட்டியாளர்கள்.. வெளியேறப்போவது யார்?
பிக் பாஸ் 9
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் 9 இந்த வாரம் துவங்கிவிட்டது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
வீட்டிற்குள் வந்த முதல் நாளே பல மோதல்கள் ஏற்பட்டன. திவாகர், பிரவீன் ராஜ், கெமி, கம்ருதீன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை நாம் பார்த்தோம். அதே போல் முதல் நாளில் இருந்த போட்டியும் கடுமையாகியுள்ளது. அத்தியாவசியமான தண்ணீரை சேமித்து வீட்டிற்குள் வாழவேண்டும் என அதற்கான கடுமையான டாஸ்கை பிக் பாஸ் கொடுத்துள்ளார்.
இந்த வார நாமினேஷன்
சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள நபர்கள் யார்யார் என்று பார்க்கலாம். 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ள நிலையில், முதல் வாரமே எலிமினேஷன் நடைபெறவுள்ளது.
இதில், வியானா, ஆதிரை, பிரவீன் ராஜ், பிரவீன் காந்தி, திவாகர் மற்றும் கலையரசன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கலையரசனுக்கு மட்டுமே 12 வாக்குகள் கிடைத்துள்ளது. நாமினேட் செய்யப்பட்டுள்ள ஆறு போட்டியாளர்களில் ஆதிரைக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாம்.
மேலும் குறைவான வாக்குகளை பிரவீன் காந்தி பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், வார இறுதியில் இது மாறலாம். அதில் யார் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.