வேறொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் பிக்பாஸ் 9 அன்ஸீன்.. முழு விவரம்
பிக்பாஸ் 9
பிக்பாஸ், தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி ஷோ.
தமிழில் கடந்த ஜுன் 2017ம் ஆண்டு பிக்பாஸ் முதல் சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாக துவங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க முதல் சீசன் ஆரம்பமாக நிறைய பிரச்சனைகள், சர்ச்சைகளை சந்தித்தது.
ஆனால் படு ஹிட்டான பிக்பாஸ் நிகழ்ச்சியும் முதல் சீசன் என்று சொன்னால் அனைவரும் நம்புவார்கள். கடந்த 8வது சீசன் முதல் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க ஆரம்பித்தார், விரைவில் ஒளிபரப்பாக போகும் 9வது சீசனையும் அவரே தொகுத்து வழங்க இருக்கிறார்.
அன்ஸீன்
வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் 9வது சீசன் தொடங்கவுள்ளது. அக்டோபர் 6ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
தற்போது வேறொரு தகவல் என்னவென்றால் பிக்பாஸ் 9வது சீசன் அன்ஸீன் வீடியோ அக்டோபர் 7ம் தேதி முதல் மாலை 6 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.