பிக்பாஸ் 9 சீசனிற்காக விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியமா?
பிக்பாஸ் 9
விஜய் டிவி, இதில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
அந்த நிகழ்ச்சிகளில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ஷோ தான் பிக்பாஸ். கடந்த அக்டோபர் 5ம் தேதி அதாவது நேற்று பிக்பாஸ் 9வது சீசன் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாக தொடங்கியது.
9வது சீசனில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் என சமூக வலைதளங்களில் சுற்றிவந்த லிஸ்டில் இல்லாத பிரபலங்கள் பலர் 9வது சீசனில் உள்ளனர். அட இவர்கள் எல்லாம் வந்துள்ளார்களா என ரசிகர்கள் ஆர்வமாக நிகழ்ச்சியை காண ஆரம்பித்துள்ளனர்.
சம்பள விவரம்
7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்க 8வது சீசனில் இருந்து விஜய் சேதுபதி தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.
7வது சீசன் மீது மக்களை கவர்ந்த விஜய் சேதுபதி இப்போது 8வது சீசனிலும் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.
படு பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும் இந்த 9வது சீசனிற்காக விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
பிக்பாஸ் 9வது சீசனிற்காக ரூ. 75 கோடி சம்பளம் பெறுகிறாராம்.