நீங்க தாராளமா வெளியே போகலாம்.. ஒரு போட்டியாளரை கடுமையாக எச்சரித்த விஜய் சேதுபதி
பிக் பாஸ் 9ம் சீசன் நிகழ்ச்சி தற்போது 35 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்த வாரம் துஷார் மற்றும் பிரவீன் ராஜ் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
கடந்த வாரமே துஷார் மற்றும் அரோரா ஆகியோரை விஜய் சேதுபதி எச்சரித்து இருந்தார். அவர்கள் இருவரும் ஷோவுக்குள் இருக்கும் பார்வையாளர்கள் என அவர்களை கலாய்த்தார். அதன் பிறகும் அவர்கள் அப்படியே இருந்ததால் துஷார் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

அரோராவை எச்சரித்த விஜய் சேதுபதி
இந்நிலையில் இன்றைய எபிசோடில் விஜய் சேதுபதி அரோராவை மீண்டும் எச்சரித்து இருக்கிறார். அவர் சரியாக விளையாடவில்லை என மற்ற போட்டியாளர்கள் விமர்சனம் வைத்த நிலையில் விஜய் சேதுபதி அவரிடம் ஒரு விஷயம் கூறினார்.
"வெளியே போனாலும் பரவாயில்லை என்றால் சொல்லிடுங்க, நான் பிக் பாஸிடம் சொல்லிடுறேன். நீங்கள் தாராளமா வெளியில் வரலாம்" என விஜய் சேதுபதி கூறி இருக்கிறார்.