பொறுமையை சோதிக்கிறாங்க.. பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் ஆதங்கத்தில் போட்ட பதிவு
பிக் பாஸ் 9ம் சீசன் தற்போது தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இதை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
சர்ச்சையான போட்டியாளர்களை மட்டும் தேர்வு செய்து பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தது ஆரம்பத்தில் இருந்தே விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

பிக் பாஸ் குரல் கொடுப்பவர் ஆதங்கம்
இந்த வருடம் போட்டியாளர்கள் யார் சொல்வதையும் கேட்பதாக இல்லை. பிக் பாஸ் சொன்னாலும் சரி, தொகுப்பாளர் விஜய் சேதுபதி சொன்னாலும் சரி, போட்டியாளர்கள் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு தான் வருகின்றனர்.
அவர்களை பிக் பாஸ் அடிக்கடி எச்சரிப்பதும் தொடர்கதை ஆகிவிட்டது. இந்நிலையில் பிக் பாஸ் ஆக குரல் கொடுத்து வரும் சாஷோ இன்ஸ்டாவில் கடும் ஆதங்கத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.
பொறுமையை தான் தற்போது கற்று வருவதாக கூறி இருக்கிறார். அந்த அளவுக்கு பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் டீமை செய்து வருகிறார்களாம்.