பிக்பாஸ் 9ல் Wild Card என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை... யாரு பாருங்க, வீடியோ இதோ
பிக்பாஸ் 9
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட்டான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ்.
ஒவ்வொரு வருடமும் புதிய போட்டியாளர்களுடன் புத்தம்புதிய கான்செப்டுடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கப்பட்டது.
20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சாரா, அதிரை ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் ஒரே சண்டை தான், நிகழ்ச்சி அதிகம் சர்ச்சையாக சென்றுகொண்டிருக்கிறது.

வைல்ட் கார்டு
கடந்த சில நாட்களாகவே வைல்ட் கார்டு என்ட்ரி குறித்த பேச்சு தான் அதிகம் வருகிறது. சின்னத்திரை நட்சத்திர ஜோடியான பிரஜன்-சான்ட்ரா ஜோடி வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கிறார்கள் என கூறப்பட்டது.

ஆனால் அவர்களுக்கு பதில் ஒரு சின்னத்திரை நடிகை என்ட்ரி கொடுக்கிறார். அவர் வேறுயாரும் இல்லை நாம் ஏற்கெனவே சொன்னது போல் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மிகவும் பிரபலமான திவ்யா கணேஷ் தான் என்ட்ரி கொடுக்கிறாராம்.
அவரே தான் பிக்பாஸில் என்ட்ரி கொடுக்கப்போகும் விஷயத்தை கூறியுள்ளார். இதோ வீடியோ,