பிக்பாஸ் 9 சீசனில் வெற்றிப்பெற்ற போட்டியாளருக்கு கிடைக்கும் பரிசுத் தொகை... எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 9
அட பொழுதே போக மாட்டாது பா, போர் அடிக்குது என கூறும் அனைவருக்கும் ஒரு பொழுதுபோக்கு விஷயமாக அமைந்துள்ளது பிக்பாஸ்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது பிக்பாஸ் 9வது சீசன். விஜய் சேதுபதி தொகுத்து வழங்க நேற்று (அக்டோபர் 5) முதல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.
பிரம்மாண்டத்தின் உச்சமாக தொடங்கியுள்ள பிக்பாஸ் 9 சீசனில் ஆரம்பமே சண்டையில் தொடங்கியுள்ளது என்று தான் கூற வேண்டும்.
முதல் பரிசு
பிக்பாஸ் தொடங்கியதும் மக்கள் ஆர்வமாக நிகழ்ச்சியை காண தொடங்கியுள்ள நிலையில் ஒரு சூப்பரான விவரம் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு சீசனுக்குமே எதிர்ப்பார்ப்பும், ரசிகர்களும் உயர்ந்து வர போட்டியாளர்களுக்கான சம்பளமும், பரிசுத் தொகையும் ஏறிக்கொண்டே தான் வருகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் ரூ. 60 லட்சம் பரிசுத் தொகை வழங்கிவந்த நிலையில் இந்த 9வது சீசன் வெல்பவருக்கான பரிசுத்தொகை விவரம் வெளிவந்துள்ளது.
அதாவது இந்த 9வது சீசனில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு ரூ.1 கோடி வரை ரொக்க பரிசு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.