பிக்பாஸ் ஆரியா இது! மிரள வைத்த வீடியோ! அவரா இப்படி? ரசிகர்கள் ஷாக்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் தற்போது உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் ஆரி. மற்ற போட்டியாளர்களுக்கும் மிகவும் சவால் கொடுக்கும் போட்டியாளர் இவரென்பதை அனைவரும் அறிவார்கள். குறிப்பாக ஆரியை அண்ணா என அழைக்கும் பாலாஜி இதை குறிப்பிட்டதுண்டு.
ஆரியை அனைவருமே கார்னர் செய்வதை நாம் நிகழ்ச்சியில் பார்க்க முடிகிறது. மேலும் அவர் பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் ஆரிக்கு இருக்கிறது என்பது பலரின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பு. அவருக்கு தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது.
திறமையான நடிகராக இருந்தாலும் கூட அவருக்கு இதுவரை அமையாத பெரிய பட வாய்ப்புகள் இனி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக நல ஆர்வலராக பல நற்பணிகளையும், விவசாயிகளுக்காகவும் குரல் கொடுத்து வரும் அவர் பகவான் என்ற படத்தில் நடித்துள்ளாராம்.
இதன் மோசன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மிரட்டலான தொனியில் ஆரியின் அந்த லுக் பலரையும் வியக்க வைத்துள்ளது. யார் இந்த பகவான் என பொறுத்திருந்து பார்ப்போம்..